பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தொல்காப்பிய ஆராய்ச்சி சுட்டவே ஆசிரியர் பொதுப்பட மொழிந்தார் எனில் பொருந்தும். தலைவனும் தலைவியும் சமமாகக் கருதப்பட்டாலும் தலைவனே உயர்ந்தவனாகக் கருதப் படுதல் எல்லாக் காலத்திலும் எல்லா நாட்டிலும் உண்டு. சமத்துவக் கொள்கை வற்புறுத்தும் பொது உடைமை நாட்டிலும் ஆண்களே தலைமை இடம் பெறுகின்றனர். கணவனே உயர்வுக்குரியவனாக இருக்கின்றான். மனைவியை உயர்த்திக் கூறலும் பணிதலும் காதல் நிகழ்ச்சிகளில் காணலாம். ஊடல் காலத்தில் மிகுதியாக நிகழும். ஆதலின் "மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவி யுள் உரிய" என்றார் ஆசிரியர். தலைவியின் பணிதலே யன்றி, இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்ளு தலேயன்றி இகழ்தலும் உண்டு. ஊடல் காரண மாகத் தலைவிதான் தலைவனை இகழ்வாளேயன்றித் தலைவன் தலைவியை இகழ்ந்ததாகப் புலனெறி வழக்கம் கிடையாது. தலைவி இகழுங்கால் வெளிப்படையாக இகழாமல் மறை பொருளாகத் தான் இகழ்வாள். குறிப்பாக பொருள் புலப்படுமாறு அகத்துறைப் பாடல் அமையுமேல், அப்பாடல் குறிப்பாகப் பொருள் தரும் முறையை இறைச்சி என்பர். இவ் விறைச்சியை அறிந்து விளங்கிக் கொள்ளும் திறனில்லார்க்கு இது ஒரு தனி மொழி போல் தோன்றும்.

  • இலங்கு மருவித்தே! இலங்கு மருவித்தே

வானின் இலங்கும் அருவித்தே ! தான் உற்ற சூள்பேணாள் பொய்த்தான் மலை' (கலி-41) தோழி! தான் கூறிய உறுதி மொழியைக் கூறிய வாறு காப்பாற்றாதவன் மலை விளங்கும் அருவியைப் பெற்றிருக்கின்றதே! மழை பெய்தலால் விளங்கும் அருவியைப் பெற்றிருக்கின்றதே!