பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 1. வெட்சிதானே குறிஞ்சியது புறனே. 2. வஞ்சிதானே முல்லையது புறனே. 3. உழிஞைதானே மருதத்துப் புறனே. 4. தும்பைதானே நெய்தலது புறனே. 5. வாகைதானே பாலையது புறனே. 6. காஞ்சிதானே பெருந்திணைப் புறனே. 7. பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே. 213 குறிஞ்சி காதல், வெட்சி போர்.போர் செய்யும் ஆண்மையும் வீரமும் உள்ள இடத்தில் காதல் ஆட்சி புரியும். காதலனுக்கு வீரம் இன்றியமையாதது. காதல் துய்க்கப்படுவது பிறர் அறியாமல். களவொழுக்கத்துக்கு ஏற்றது கங்குலே. வெட்சி யென்பதும் களவின்கண் பிறர் அறியாமல் ஆநிரை கொள்ளுதலே.களவில் காதல் கொள்வது இல்லத் திற்குத் துணையாவது. களவில் ஆநிரை கொள்வது அறத்தை நிலைநாட்ட ஆதலின் ஒன்றுக்கொன்று அகமும் புறனுமாயின. தமிழகத்தில் பேரரசு நிலை பெற்றகாலம் இன்னது என வரையறுத்துக் கூறுதல் இயலாது. சேர சோழ பாண்டியர் எனப்படும் மூவேந்தர்கள் மரபு என்று தோன்றியது என்பது எவராலும் வரையறுத்துக் கூறப்படவில்லை. வரலாற்றுக் காலத்துக்கு மிக மிக முற்பட்ட கால மாகும். வெட்சிப் போர் முறையும் மிக மிகப் பழங் காலத்தது ஆகும். இரு பெருவேந்தர்கள் போர் புரியக் கருதினரேல் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் ஆவும் அந்தணரும் காப்பாற்றப்படவேண்டுமென்று கருதுவர். அந்தணர் என்போர் அறவோர், பிறர்க்குத் தண்ணளி பூண்டு ஒழுகி என்றும் நன்மையே கொள்வோர். ஆவும் மக்களுக்குப் பலவகையிலும் பயன்படும் உயிராகும். போர் செய்யத் தொடங்கும் ஒருவன்