பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் வழிபாட்டிடங்களே 217 கோயில்களாக மாறியுள்ளன என்பதின் உண்மை ஆராயத் தக்கது. .. வஞ்சி' என்பது ஒருவர் மேல் ஒருவர் போர் கருதிப் படையெடுத்துச் செல்லுதல், முல்லைக்குப் புற னாகக் கருதப்பட்டது, இரண்டுக்கும் முதல் கரு, உரி ஒத்திருப்பதனால் என்பர். அக்காலத்தில் போர் நடப்பது மக்களில்லாக் காட்டிடத்தேயாம். முல்லைக் கும் முதல் பொருளாம் நிலன் காடும், காடு சார்ந்த இடமுமாகும். கார்காலத் தொடக்கத்தில் போர் நின்றுவிடும். முல்லைக்கு உரிய காலம் கார் காலம். காட்டில் உள்ள விலங்கும் பறவையும் மரம் செடி கொடி முதலியன பிறவும் இரண்டுக்கும் ஒத்தன. முல்லையில் தலைவி தலைவனைப் பிரிந்திருக்கின்றாள். வஞ்சியில் தலைவன் தலைவியைப் பிரிந்திருக்கின்றான். ஆதலின் முல்லைக்கு வஞ்சி புறம் என்றனர் என்பர். போர் கருதிப் படையெடுத்தல் எப்பொழுது? காரணமின்றி வீரம், படைப் பெருக்கம் முதலியன காட்டுவான் வேண்டியோ நாடுகளை அடிமைப்படுத் தும் பெரு வேட்கை கொண்டோ படையெடுத்தலை ஆசிரியர் குறிப்பிட்டாரிலர். ஓர் அரசன் நாடுகளை அடிமைப்படுத்தித் தன் ஆட்சிப் பரப்பைப் பெருக்குவதில் தணியாத வேட்கை யுடையவனாக இருப்பானானால் அவன் அஞ்சி நல்வழி யடையப் படையெடுத்தல் வேண்டும். நாடு பெருக்கி வல்லரசாக வையகம் போற்றப் படையெடுத்தலை ஆசிரியர் போற்றினாரிலர். இவ்விருபதாம் நூற்றாண்டில் நாகரிகமுற்ற நல்லரசுக் கொள்கையாக விளங்கும் ஒன்று ஆசிரிய ரால் கூறப்பட்டிருப்பது, தமிழினத்திற்குப் பெருமை தருவதன்றோ - போர்-போர்க்காக அன்று; நாட்டை