பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தொல்காப்பிய ஆராய்ச்சி விரிவுபடுத்த அன்று; பிறரை அடிமை கொள்ள அன்று - விரிவுபடுத்தவும் அடிமைப்படுத்தவும் போர் தொடுக்கும் எண்ணம் கொண்டுள்ள அரசு மீது போர் தொடுப்பது எனின் அப்போர் அமைதிப் போர். அறப்போர் என அழைக்கப்படும் தகுதி யுடையது அன்றோ? வேந்தனை 'எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் = " அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே' எஞ்சா குறையாத, மண் நசை - மண்ணாசையுடைய அரசனை, வேந்தன் நல்லறம் கருதும் அரசன், அஞ்சுதக - மண்ணாசை மன்னன் அஞ்சுமாறு, தலைச்சென்று - முன் படையெடுத்துச் சென்று, அடல் குறித்தன்றே = வெல்லுதல் குறித்ததாகும் வஞ்சி. - இவ்வஞ்சித்திணை - பதின் மூன்று துறைகளைப் பெற்றுள்ளது. எல்லாத் துறைகளும் போர் வேந்தர் படையெடுத்துச் செல்லுங்கால் எல்லா நாடுகளிலும் நிகழக் கூடியனவே. ஆயினும் அவற்றுள் மூன்று துறைகள் பண்டைத் தமிழர்களின் நாகரிகப் பண்பாட்டு மேம்பாட்டையும் கருமச் சூழ்ச்சித் திறனையும் எடுத்துக் காட்டவல்லன. அவை மாராயம் பெற்ற நெடு மொழி, பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை, அழிபடை தட்டோர் தழிஞ்சி என்பனவாம். மாராயம் பெற்ற நெடுமொழி: வேந்தனால் சிறப் பெய்திய அதனால் தானேயாயினும் பிறரேயாயி னும் கூறும் மீக்கூற்றுச் சொல் ஆகும். அரசன் படை வீரர்கட்கும் படைத் தலைவர்க்கும் பரிசும் பட்டமும் அளித்துப் பாராட்டுதலும் ஊக்கப்படுத்து. தலும் அக்காலத்திலும் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு அளிக்கும் சிறப்புக்கே மாராயம் என்று பெயர்.