பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 1171 "கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்” எனவும் கூறுதலான் அறியப்படும். இதனால் ஐந்திரம் வழங்கிய காலத்திற்கும், ஐந்திரம் அருகிய காலத்திற்கும் இடை யிட்ட காலம் பேரளவினதேயாக வேண்டப்படும். ஆத லானும் தொல்காப்பியர் காலம் பிந்தியது ஆகாது என்று ஒரு தலையாகக் கொள்ள". பாணினீயின் காலம் கி.மு.350. அதற்கு முன்னரே தொல்காப்பியர் வாழ்ந்திருக்க வேண்டும் என்பர் சிலர். 1 பாணினீய ஆராய்ச்சியாளராம் காத்தியாயனர் மார்க்ச்முல்லர் கருத்திற்கேற்ப கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டு மென்றும், பாணினி அவர்க்குச் சில நூற்றாண்டுகட்கு முன்னராவது வாழ்ந்திருக்க வேண்டுமென்றும் கூறுவர். 2 ஆகவே பாணினியின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு என்போரும் உளர். இவ்வாறு தொல்காப்பியரின் காலத்தைப் பாணினியின் காலத் துக்கு முற்பட்டதென்று ஆராய்ச்சியாளர் பலரும் கூறி யுள்ளனர். ஆனால் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் இக் கருத்துக்கு மாறுபடுகின்றனர்.3 "தொல்காப்பியத்தின் பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என வருகின்றது. பாணினீயத்தைக் கூறாது ஐந்திரத்தைக் கூறினமை யாலும். இரண்டனுள் ஐந்திர வியாகரணம் முந்தியது 1 Tholkappiyar must have lived antenior to B. C. 350 which is the date assigned to Panini by the best authorities Tamil Studies- Page 17. 2 R. C. Dutt-Early Hindu Civilization-Page-203.

  • இலக்கியச் சிந்தனைகள்-பக்கம்-50-57.