பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 221 இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந். தது; முடியவில்லை. செர்மன்நாடு தோற்றுவிடும் போல் தோன்றியது. தோல்வியைப் பெற்றுவிட வில்லையாயினும் சர்ச்சிலும், சுடாலினும், உருசுவெல்ட்டும் கூடி வெற்றிக்குப் பின்னர் யார் யார்க்கு எது எது என்று ஆராயத் தொடங்கித் தமக்குள் பங்கிட்டுக்கொண்டு ஒப்பந்தமும் செய்து கொண்டுவிட்டனர். இம்முறையைத் தொல்காப் பியர் கொள்ளார் தேயம் குறித்த கொற்றம்' என்பர். பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான்போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றி" என்று பொருள் கூறி, "இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற் குக் கொடுத்த துறையும் அது " என்று மொழிவர் நச்சினார்க்கினியர். " நூற்றாண்டுகள் சென்றாலும் மக்கள் உளநிலை மாறிடாது போலும். உடை மாறலாம், உணவு மாறலாம். படைக் கருவி மாறலாம். போர் முறை மாறலாம். ஆனால் உள்ள இயல்பு அன்றுமின்றும் என்றும் ஒன்றுதான் போலும். 'தும்பை" என்பது இருபெருவேந்தரும் எதிரெதிராக நின்று படைகள் புடைசூழப் போரிடு வது ஆகும். "போர் என்றால் சாவுதானே. கணவரையிழந்த மனைவியரும், தந்தையரை இழந்த மக்களும், காதலரை இழந்த காதலியரும் மக்களை இழந்த பெற்றோரும், கண்ணீர் வடிப்பதுதானே போரின் விளைவு. இரக்கம், இரங்கல் என்பனவே. போர்க்குரியன. அகத்திணையில் நெய்தல் என்பதும் இரங்கல்தானே. தலைவனைப் பிரிந்த தலைவி அவன் பிரிவினை ஆற்றாது இரங்குதல் ஆதலின் "தும்பை" தானே நெய்தலது புறனே" என்றார்.