பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 225 விட்டுப் பிரிந்து சென்று கடமைகள் ஆற்றும் நிலைமை கள் உண்டு. பாலையால் தலைவியிடம் காதல் மிகுதல் போல், வாகையால் தாம் மேற்கொண்டுள்ள கடமை கள்பால் காதல் மிகும். பாலைக்கும் நிலவரையறை யில்லை. வாகைக்கும் நிலவரையறையில்லை. ஆதலின் பாலைக்கு வாகை புறனாயிற்று. வாகை என்பது யாது? குற்றமற்ற கொள்கை யாகத் தாம் கொண்டுள்ள குறிக்கோளைப் பலவகையா லும் சிறப்புறப் பெருக்குதலாகும். தாம் கொண்டுள்ள வாழ்வியற் குறிக்கோள் குற்றமற்றதாக இருத்தல் வேண்டும். பிறர்க்குத் தீமை பயக்கக் கூடியதாக இருத்தல் ஆகாது. ஆதலின் தாவில் கொள்கை எனும் அடை கொடுத்துச் சிறப்பித்தார். வெற்றி பிறருடன் உறழ்ந்தும் (போட்டி யிட்டும்) பெறலாம்; தாம் மேற்கொண்டுள்ள ஒன்றுள் தாமே வீறு பெற்று உயர்ந்தும் பெறலாம். நச்சினார்க்கினியர் பிறரோடு உறழ்ந்து பெறும் வெற்றியை வாகையென்றும் தாமாகத் தம் துறையில் மேம்படு வென்றியை முல்லையென்றும் அழைப்பர். ஆனால் ஆசிரியர் முல்லை யென்ற ஒன்றைச் சுட்டிக் கூறினாரிலர். நாவலர் பாரதியார் அவர்கள் உறழ் பவரின்றி ஒரு துறையில் ஒப்புயரும் பரிசும் வாகையே யாகும்" என்றனர். இவ்வகை எழு வகைப்படும். 1. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் 2. ஐவகை மரபின் அரசர் பக்கமும் 3. இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் 4. மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் 5. நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும் 15-1454