பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தொல்காப்பிய ஆராய்ச்சி 8. பகைவரும் நாணுமாறு தாம் கூறியுள்ள வஞ்சினத்திற்கேற்ப உயிர்க்கொடை ஆற்றல். 9. பகைவரை அன்பு நெறியால் வென்று. சேர்தல். அறத்திற்குரியன :- 1. காளைமாட்டாற் சிறப்பெய்தும் உழவரும் பசுவால் சிறப்பெய்தும் ஆயரும் தம் தொழிலில் வெற்றி பெறுதல். 2. அரசு கட்டிலை (அரியணையை)த் துறந்து செல்லுதல். 3. எண் வகைச் சிறப்புக்களும் 1 பொருந்தி அவை உறுப்பினராய் இருத்தல். 4. இடையறவின்றி வள்ளிய புகழை வளர்க்கும் கொடை. 5. தவறிழைத்தோரைப் பொறுக்கும் காவற் சிறப்பு. 6. மெய்ப்பொருள் பற்றி ஆராயும் திறல். 7. நூல்களில் வரையறுத்துக் கூறியுள்ளவாறு ஒழுகுதல். 8. பிறர்க்குத் தொண்டு செய்யும் அருள் உணர் வோடு மேற்கொண்ட துறவு வாழ்க்கை.* 9. எவற்றினிடமும் பற்றின்றி வாழும் உள்ளத் துறவு. 1. எண் வகைச் சிறப்புக்கள் : ஒழுக்கம், கல்வி, குடிப்பிறப்பு. வாய்மை, தூய்மை, நடுவு நிலைமை, அவாவின்மை, அழுக்காறாமை என்பன.: இவையுடையோரே அவை யுறுப்பினராய் இருந்து அறம் கூறும் தகுதி. யுடையார் ஆவார். 2. இல்லறத்தை விட்டுப் பொது லைப் பணியில் ஈடுபடும் துறவு. 3. இல்லறத்திலிருந்து கொண்டே பற்றின்றி பிறர்க்குப் பயன்பட வாழ்தல்.