பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஆதலானும், தொல்காப்பியம் பாணினீயத்திற்கு "முன் தோன்றியது; எனவே பாணினீயத்தின் காலமாகிய கி.மு. 450க்கு முற்பட்டது. ............ பாணினீயத்தைத் கூறாதது தொல்காப்பியம் அதற்கு முற்பட்டது எனத் துணிதற்கு ஒரு காரணமாகமாட்டாது என்பதனை மட்டும் இங்கே தெளிவுறுத்த விரும்புகின்றேன். முதலில் இவ்வாறு கூறுதல் தருக்க நெறியோடு பொருந்து வதன்று, தற்காலத்து ஓர் ஆசிரியன் நன்னூலைப் பின் பற்றி ஓர் இலக்கண நூல் இயற்றுகின்றான் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு அளித்த சிறப்புப் பாயிரத்தில், பின் நன்னூல் உணர்ந்த மன் பேராசான்' என வரு கின்றதென்றும் கருதிக்கொள்வோம். இப் பாயிரம் தொல்காப்பியத்தை உணர்ந்தானாகக் கூறாமையினாலே இவ்வாசிரியன் தொல்காப்பியருக்கு முற்பட்டவன் என்று துணிதல் சரியாகுமா? இது போன்றதேயாகும் மேலே குறித்த ஆராய்ச்சியாளர் கூற்று'. வையாபுரியின் இக் கூற்றின் மெய்யாம் தன்மையை ஆராய்வோம். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் எஞ்ஞான்றும் தமிழ் நூல்களின் காலத்தைப் நூற்றாண்டுகட்குக் கொண்டுவருவதில் தனி முயற்சியும் உழைப்பும் உடையவர்கள் என்பதைத் தமிழுலகம் நன்கு அறியும். ஆராய்ச்சியாளர் பலரும் உண்மை நெறியில் ஒரு வழியிற் சென்றால், வையாபுரியார் அதற்கு எதிர் வழியில் சென்று நடுநிலை யாளர் என்று தம்மை நாட்டிக்கொள்ள முயலும் இயல் பினர். அவ்வியல்பிற்கு ஏற்பவே தொல்காப்பியர் காலத்தையும் மாற்றிக் கூற முற்பட்டுள்ளனர் போல் தோன்றுகின்றது. ஆனால் உண்மைச் சான்றுகள் அவர்க் குத் துணை செய்யவில்லை. அவர் கூறியுள்ள எடுத்துக்