பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 229 இவைகளால் பண்டைத் தமிழரின் நாகரிகச் சிறப்பும் பண்பாட்டு உயர்வும் தெற்றெனப் புலனாகின்றன. மறத்திலும் அறத்திலும் உயர்ந்த தமிழர் வாழ்வியலை உலகத்தார் அறிந்திலரே. உலக மன்றில் தொல்காப்பியம் தன் பொருள் நலம் குன்றாது அரியணை அமருங் காலத்தில்தான் அறிதல் கூடும். காஞ்சி யென்பது உலக நிலையாமையை உணர்த் துவது. உலகில் தோன்றுவனவெல்லாம் அழியக் கூடியனவே. உலகம் பல சிறப்பியல்புகளைப் பெற்றுள்ளது. உலகம் சிறப்புற அறிவாற் சிறந்த சான்றோர் பலவற்றை ஆக்கிக் கொண்டேயுள்ளனர். புதியன புதியன கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. என்ன புதியன தோன்றினாலும் உலக அழிவைத் தடுக்கும் ஆற்றல் பெற்றில. மனிதன் நூற்றிருபது ஆண்டுகட்குமேல் வாழ்ந்தானில்லை. இன்று தோன்றிவரும் அறிவியல் முன்னேற்றத்தால் மனிதன் சாவா நிலையை அடைவான் என்று எண்ண லாம். புகழுடம்பால் சாவா நிலையை அடையலாமே யன்றிப் பூதங்களால் ஆன இவ்வுடம்பு பல நூறு ஆண்டுகள் நிலைத்திருக்க முடியாது. இவ்வுண்மையை அறியாததனாலும் அறிந்தும் மறந்ததனாலும் உலகில் நிகழ்ந்த கொடுமைகள் பல. இளமையும் நில்லாது ; யாக்கையும் நில்லாது; வான் பெருஞ் செல்வமும் நில்லாது' என்ற உண்மைகளை மனிதன் அறியத் தொடங்கும் நாளே அவன் உண்மையான அறிவைப் பெறும் நாளாகும். இவ்வுண்மையைத் தன் முதுமை யில்தான் தெள்ளத் தெளிய அறிய முடிகின்றது. ஒவ்வொரு இனமும் பலவகையாலும் முதிர்ச்சியுற்ற நிலையில்தான் இவ்வுண்மையை அறிய முடியும். தமிழினம் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே