பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 233 தொடக்கமாம் வசையற்ற வெட்சியின் மூன்று துறை களும் கடவுளைப் பரவுதலுடன் பொருந்தி வரும் என்றனர். இருவர் உரைகளும் ஆராயத்தக்கன. ஆசிரியர் கருத்து என்னவென விளங்கவில்லை. 'கொற்ற வள்ளை ஓரிடத் தான" என்பதற்கு நச்சினார்க்கினியர் வெட்சி முதல் வஞ்சியீறாகிய பாடாண் கொற்ற வள்ளை தேவர் பகுதிக் கண்ணது அன்றி, மக்கட் பகுதிக்கே வரும் என்று கூறுகின்றார் நாவலர் பாரதியார் அவர்கள். வஞ்சி வகைக் கொற்ற வள்ளையும் ஒரோவழிக் கடவுள் வாழ்த்தொடு வரும் என் று கூறுகின்றார். இருவர் கருத்துக்களும் ஆராயற்பாலனவே. புலவர்கள் எவ்வெவ்வாறு பாடல் வேண்டுமென்ப தற்குப் பல துறைகள் வகுத்துக் கூறுகின்றார். அவற் றுள் ஒன்று கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தல்' என்பதாகும். கொடுப்போரைப் புகழ்ந்து கொடாதவரைப் பழிக்கலாமா? இது புல வர் பெருமக்களுக்குப் பொருந்துமா என்பர் சிலர். நல்லோரைப் புகழ்தல் வேண்டும் ; அல்லோரைத் திருத்துதல் வேண்டும். திருத்துதல் என்பது அவர் குற்றம் எடுத்துரைத்துப் பழித்தலே. செல்வத்தின் பயன் யாது? ஈதலே யன்றோ? செல்வர்கள் தம்மைச் செல்வத்தின் காப்பாளர்களாகக் கருதி ஊருணி போன்று உலகுக்குப் பயன்படுதல் வேண்டும். பயன்படாத செல்வர்கள் உலகுக்குக் கேடர்களாக அமைந்து விடுகின்றார்கள். ஆகவே அவர்களை இடித்துரைத்துத்தானே திருத்துதல் வேண்டும். இன்று செய்தி இதழ்கள் அத்தொண் டைச் செய்து வருகின்றன.