பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 235 காப்பியர் திணையும் துறையும் வகுத்துச் செல்கின் றார். ஆகவே பாடாண்திணை என்பது வெறும் புகழ்ச்சிக்குரிய திணை என்று கருதாது நாட்டு மக்க ளுக்கு நன்மை செய்யும் கருத்துக்கள் பல கொண்ட நல்லிலக்கியம் தோன்றுவதற்குரிய திணை என்று கரு துதல் வேண்டும். ஆசிரியர் தொல்காப்பியர் அக்காலத்துக்குரியன மட்டும் கூறினாரிலர், அரசியல் தலைவர்கள் போன்று. முக்காலத்துக்குரியனவும் கூறினர் அரசியல் அறிஞராய். "ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றொடு கண்ணிய வருமே (உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின் அடிப்படையில் மூன்று காலத்துக்குரியன கருதிப் பாடப்படும்.)