பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 237 ராய்ச்சி இயற்றமிழ் இலக்கியங்களோடு தொடர் புடையதேயாகும். இலக்கியங்களில் கூறப்படும் சுவை எட்டாகும். அவையாவன: - நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை. இவ்வெட்டையும் முப்பத்திரண்டாகவும், பதினாறாகவும் காண்பர். சுவைக்கப்படும் பொருள். அதனை நுகர்ந்த பொறியுணர்வு, அது மனத்துட்பட்டவழி உள்ளத்து நிகழும் குறிப்பு. குறிப்பு உண்டானவுடன் கண்ணீர் தோன்றல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் போன்ற உடம்பின்கண் வரும் வேறுபாடு என நான்கு ஒவ்வொரு சுவைக்கும் உண்டு. ஆகவே எட்டுச் சுவைக்கும் முப்பத்திரண்டாகும். நகைச்சுவைக்குப் பொருள்கள் ஆரியர் கூறும் தமிழும், குருடரும் முடவ ரும் செல்லும் செலவும், பித்தரும் களியரும் சுற்றத் தாரை இகழ்ந்தாரும் குழவி கூறும் மழலையும் போல்வன என்பர் பேராசிரியர். வேற்று நாட்டார் தமிழ் பேசினால் தமிழர்க்கு நகைச்சுவை உண்டாக்கு வதுபோல், தமிழர் வேற்று மொழியைப் பேசினால் அம்மொழியாளர்க்கு நகைச்சுவையை உண்டாக்க லாம். ஆனால் தமிழர் தாம் கற்கும் வேற்று மொழியை அம்மொழிக்குரியவரை விடத் திருத்தமாகப் பேசும் கருத்தும் ஆற்றலும் பெற்றவர் என்பது உலகறிந்த ஒன்று அன்றோ. ஆதலின் தமிழர் கூறும் வேற்று மொழியை நகைக்குரியதாகக் கூறிலர் போலும். இங்குக் கூறப்பட்ட முப்பத்திரண்டும் பதினாறாக வும் ஆகும். சுவைப் பொருளும் சுவையறிவும் பொறியும், வேறுவேறாக நின்றால் சுவை என்பது ஒன்றுதோன்றாதே. இரண்டும் கூடியவழியே சுவை