பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தோன்றலின் தொல்காப்பிய ஆராய்ச்சி இரண்டும் ஒன்றாய்ப் பதினாறு ஆகும். உள்ளக் குறிப்பும் உடலில் தோன்றும் வேறுபாடும் கூடியவழியே மெய்ப்பாட்டை அறிகின் றோம். இவை இரண்டும் ஒன்றாய் எட்டாய் அடங்கும். இரண்டு வகை எட்டும் பதினாறாகிவிடு கின்றன. இவ்வாறெல்லாம் வகைப்படுத்திக் காண்பது நாடக நூலார்க்குரியதாம். இனி ஆசிரியர் கூறும் எட்டு மெய்ப்பாடாவன: " நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று அப்பா லெட்டே மெய்ப்பா டென்ப, என்னும் நூற்பாவால் அறியலாம். இவ்வெட்டும் ஒவ்வொன்றும் நான்கு வகைப்படும். 1. நகை : எள்ளல். இளமை, பேதைமை, மடன். இந்நான்கின்வழியே நகை தோன்றும். 2. அழுகை: இளிவு, இழவு, அசைவு, வறுமை. இவை நான்கின் வழியே அழுகை தோன்றும். 3.இளிவரல்:மூப்பு,பிணி,வருத்தம்,மென்மை. இவை நான்கின்வழியே இளிவரல் தோன்றும். 4. மருட்கை: புதுமை, பெருமை, சிறுமை. ஆக்கம். இவை நான்கின் வழியே மருட்கை தோன்றும். மருட்கை ' என்றால் வியப்பு. 5. அச்சம்: அணங்கு, விலங்கு, கள்வர், இறை. இவை நான்கின்வழியே அச்சம் தோன்றும். 6. பெருமிதம் : கல்வி, தறுகண், இசைமை, கொடை. இவை நான்கின்வழியே பெருமிதம் தோன்றும். பெருமிதம் என்பதற்கு வீரம் என்று பொருள் கூறியுள்ளனர் பேராசிரியர்.