பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 239 7. வெகுளி: உறுப்பறை, குடிகோள், அலை, கொலை. இவை நான்கின் வழியே வெகுளி தோன்றும். உறுப்பு அறை-கை குறைத்தலும் கால் குறைத்தலும். குடிகோள்- மனைவியும் சுற் றமும் குடிப் பிறப்பும் முதலாயவற்றுக்கண் கேடு சூழ்தல். 8. உவகை: செல்வம், புலன், புணர்வு, விளை யாட்டு-இவை நான்கின் வழியே உவகை தோன்றும். உவகை: மகிழ்ச்சி, செல்வம்: செல்வ நுகர்ச்சி, புலன் : கல்விப் பயனாகிய அறிவுடைமை. இவை முப்பத்திரண்டேயன்றி இன்னும் முப் பத்திரண்டு மெய்ப்பாடுகளும் உள. அவை வருமாறு: உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று கனவு, முனிதல். நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண். பொச்சாப்பு, பொறாமை வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்பனவாம். • இவ்வறு பத்து நான்கு மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக நிகழக் கூடியன. அவை அகத்திற்குரிய மெய்ப்பாடுகளும் உள. எழுபதாக விரியும். அவற்றுள் களவுக்குரியவையும், கற்புக்குரியவையும், கூட்டத்தின் பின் நிகழக்கூடி யனவும், தலைவனுக்கும் தலைவிக்கும் உரிய ஒப்பின் வகையால் தோன்றுவனவும் அடங்கியுள்ளன. இவைகள் காதல் பற்றி நூல் எழுதுவோரும், காதலர் களாக நடிப்போரும் நன்கு அறிந்துகொள்ளத் தக் இவைகளுக்குரிய பொருள் விளக்கங்கள் பேராசிரியரால் தரப்பட்டுள் [பேராசிரியர் உரை - 808 - 811) ஆண்டுப் படித்து ளன இன்புறுக.