பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 தொல்காப்பிய ஆராய்ச்சி உவமையாக வரும் பொருள்கள் உவமேயமாக வும் உவமேயமாக வரும் பொருள்கள் உவமையாக வும்வருதல் உண்டு. தாமரை போன்ற முகம் என்பது போல் முகமன்ன தாமரை என்றும் கூறுவதனால் குற்றமின்று. முகத்தைச் சிறப்பிக்க வேண்டியா இடத்தில் முகம் பொருளாகவும் தாமரையைச் சிறப் பிக்க வேண்டிய இடத்தில் தாமரை பொருளாகவும் வரும். உவமைகள் பொருள்களை (உவமேயங்கள்விட மிகமிகப் பெரியனவாகவும் மிகமிகச் சிறியனவாகவும் அமைதலும் உண்டு. அவ்வாறு அமையுங்கால் வெளிப்படுத்தக் கருதிய சிறப்பினின்றும் நீங்காதன வாய் அமைதல் வேண்டும்.

  • மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்"

கூந்தலுக்கு அருகே விளங்கும் நெற்றிக்கு உவமை யாகக் கடலும் அதில் தோன்றிய எட்டாம் நாள் தேய் பிறையும் கூறப்பட்டுள்ளன. கடல் போலும் கூந்தல் என்பதும் திங்கள் போலும் நுதல் என்பதும். மிகம் பெரியவற்றோடு உவமிக்கப்பட்டனவே. ஆயினும் அவ்வாறு உவமிப்பது வழக்காதலின் சிறப்பி னின்றும் நீங்காவாம். "சோறு வாக்கிய கொழுங்கஞ்சி ஆறு போலப் பரந்தொழுகி ஏறு பொரச் சேறாகித் தேரோடத் துகள் கெழுமி என்னும் 'பட்டினப் பாலை' அடிகளில் சோறு வடித்த கஞ்சி ஆறு போலப் பரந்து ஓடிற்று என்று குறுந்தொகைப் பாடல்-129