பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 245 கூறுவது உண்மை நிலையை மிகுத்துச் சொல்லப் பட்டதேயாயினும் இலக்கிய வழக்குக்குப் பொருந் துவதே. இவ்வாறு கூறும் வழக்கு மிகுந்து பிற் காலத்தார் கூறிய உயர்வு நவிற்சி தோன்றிக் கற்பனை எல்லையைக் கடந்து விட்டது. உவமைகளைக் கூறுங்கால் உவமையையும் பொருளையும் பொருத்துவதற்கு இடையில் ஒரு சொல் வேண்டும். அச்சொல்லுக்கு உவம உருபு என்று பெயர். அவ்வாறு வரும் சொற்களில் முப்பத் தாறினைத் திரட்டிக் கூறிப் பிறவும் வரும் என்று குறிப்பிடுகின்றார் ஆசிரியர். அன்ன, போல, ஒப்ப. அனைய என்பன பெருவழக்காக வரக்கூடியன. இவைகளுள், இன்னின்ன வினையுவமத்திற்கும் இன்னின்ன பயன் உவமத்தற்கும் வரும் என்று வகுத்துரைப்பது அக்காலத்தில் இவைகளைப் பயன் படுத்துவதில் கொண்டுள்ள ஒழுங்கு முறையை அறிவிப்பதாகும். அவ்வாறு உவம உருபுகள் இன்றியும் வரும். வந்தால் உவமத்தொகை எனப்படும். பவளத்தன்ன வாய்' என்பது உவமவிரி; பவள வாய்' என்பது உவமத் தொகை. உவமையும் பொருளும் அடையடுத்து வருதலும் உண்டு. பொன்னை உரசிப்பார்க்கும் கட்டளைக் கல் போன்ற புன்காய்ப்பொடி பொருந்திய மார்பு. இங்கு கட்டளைக் கல்லும் மார்பும் அடை யடுத்து வந்துள்ளன. இவ்வுவமை அடிப்படையில் உள்ளுறை உவமம் தோன்றும். வெளிப்படையாகக் கூறப்பட்டதிலிருந்து மறைவாகத் தோன்றும் பொருளை அறிதல் வேண்டும்.