பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தால் தொல்காப்பியம் வழக்கற்றுப்போகவில்லை. ஆரிய மொழி நூல்களின் இயல்பு அங்ஙனமன்று. பாணினியம் தோன்றியதும் ஐந்திரம் வழக்கற்றுவிட்டது. ஐந்திரத் தினும் பாணினீயம் சிறப்புடைத்தாகக் கருதப்பட்டது. ஆதலின் ஐந்திரத்தைக் கற்றுள்ளமையால் சிறப்புப் பெறுதல் பாணினீய காலத்திற்கு முன்னர்தான் இயலும். இங்ஙனம் கூறுவது தான் தருக்க நெறிக்கு. ஒத்ததாகும். பேராசிரியர் வையாபுரியார் படைத்து மொழிந் துள்ள 'நன்னூல் உணர்ந்த மன் பேராசான் என்னும் தொடர் தொல்காப்பியமும் நன்னூலும் தோன்றிய காலங்கள் வரையறுக்கப்படாமல் இருந்தால், ஒருகால் கற்போர் உள்ளத்தைத் தடுமாறச் செய்யலாம்.நன் னூலுக்கு முற்பட்டது தொல்காப்பியம் என்பது யாவரும் அறிந்துள்ள நிலையில் இங்ஙனம் கூறினால், தொல்காப்பியத்தைத் தொட்டும் பாராதவன்' என்று இகழப்படுவானேயன்றித் தொல்காப்பியத்திற்கு முற் பட்டவன் என்று கூறப்படான். அன்றியும், ஐந்திரம் பாணினீயம் என்ற நூல் களின் கால வரையறை நன்கு அறியப்பட்டு பாணினியத்திற்கு ஐந்திரம் முற்பட்டது என்று நிலை நாட்டப்பட்ட பின்னர்தான், 'ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்' என்பதனால் பாணினீயம் அறியாதவர் என்று கூற முடிகின்றது என்பதையும் ஊன்றி நோக்கல் வேண்டும். ஆதலின் "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்ற தொடர், தொல்காப்பியர் பாணினிக்கு முற்பட் டவர் என்பதனை ஐயம் திரிபற நிலை நாட்டுகின்றது