பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 249 கருதியவாறு கேட்போரும், கற்போரும் அறிந்து கொள்ளக் கூறுகின்றவரே சிறந்த புலவராவார். இதனை நன்கு தெளிந்த ஆசிரியர் தொல்காப்பியர் சொற்களின் மரபுகளை இவ்வியலில் விளக்கியுள்ளார். மரபுகளை விளக்கும் இம்மரபியல் ஆசிரியர் கூறிப்போந்தவாறு நமக்குக் கிடைத்திலது என்று எண்ண வேண்டியுள்ளது. தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கட்டுக்கோப்புக்குட்படுத்திச் சொல்லும் ஆற்றல் பெற்றுள்ள ஆசிரியர் போக்குக்கேற்ப மரபியல் அமைந்திலது. முறை பிறழ்ந்து கிடக்கின்றது. ஆசிரியர் கருத்துக்குப் பொருந்தாத செய்திகள் கூறப்பட்டுள்ளன. இடைச் செருகல் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு நிற்கின்றது. மரம் செடி கொடி முதலிய நிற்பன பற்றிய சொற்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன முதலிய இயங்குவன பற்றிய சொற்கள் யாவும் புலவர் தெரிந்திருத்தல் வேண்டும். மக்களைப் பற்றியும் அவர்களைச் சார்ந்தவற்றைப் பற்றியும் பிற இயல் களில் விளக்கப்பட்டுள்ளன. அங்ஙனமிருந்தும். விலங்குகளைப் பற்றியும், மரங்களைப்பற்றியும் கூறுமிடத்தில் எவ்விதத் தொடர்புமின்றி வருண வேறுபாடுகளைக் குறிக்கும் செய்திகள் கூறப்படு கின்றன. இங்ஙனம் கூறும் பதினைந்து நூற்பாக் களும் (மரபியல் 71 முதல் 85 முடிய) பின்னுள்ளோ ரால் இடையில் நுழைக்கப்பட்டனவே என்பதில் ஐயமே இன்று. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை" என்ற நூற்பாவும், வேளாண் மாந்தர்க்கு உழு.தூண் அல்லது இல் என மொழிப பிறவகை நிகழ்ச்சி" என்ற நூற்பாவும் குன்றின் விளக்கெனத் தெற்றெனப் புலப்படுத்தி நிற்கின்றன. "