பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
252

தொல்காப்பிய ஆராய்ச்சி தாத வழக்கை நாட்டு மக்கள் வெறுப்பர். மொழி பெயர்க்கப்பட்ட நூல் எவராலும் விரும்பப்படாது. வீணே கிடந்து மறையும். ஆதலின் ஆசிரியர் தொல் காப்பியர், 'மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல்' என்றார். மொழி பெயர்த்து நூல் செய்தலையும் ஆசிரியர் குறிப்பிட்டதனால் அறிவு எங்கிருப்பினும் கொள்ளுதல் வேண்டும். நம் நாட்டில் தோன்றிய அறிவுதான் நமக்கு வேண்டுமென்று இருத்தல் அறி வுடைமையாகாது என்பதனைத் தெளிந்திட வேண் டும். பிற மொழிகளைக் கற்று அம்மொழியில் உள்ள நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கும் தொண்டினை யும் புலவர்களும் அரசும் மேற்கொள்ளுதல் வேண் டும். அரசு அதற்கெனத் தனித்துறை யொன்று அமைத்துப் பிற மொழிகளில் வெளிவரும் உயர்ந்த நூல்களை அவ்வப்போது தமிழில் மொழி பெயர்த் திடச் செய்தல் வேண்டும். நூல்களில் மரபு நிலை திரியாதவாறு சொற்களை ஆளுதல் வேண்டும். மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சி யாளரும் இதனை வற்புறுத்துகின்றனர். 'மாபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபு வழிப்பட்ட சொல்லி னானே ; மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும் " .. மரபு நிலையைக் கூறப் புகுந்தவர் நடப்பன, பறப்பன வற்றின் பெயர்களை இளமைப் பெயர் என்றும்,ஆண் பால் பெயர் என்றும், பெண்பால் பெயர் என்றும் வகுத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் உரியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். இளமைப் பெயர்களாவன:- பார்ப்பு, பறம். தட்டி, குருளை,கன்று,பிள்ளை,மகவு, மறி, குழவி. பார்ப்பும் பிள்ளையும் பறப்பனவற்றினும் தவழ்வன