பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 253 வற்றினும் இளமைத் தன்மையுடையனவற்றைக் குறிக்கும் என்று கூறியுள்ளார். இவை இரண்டும் இக்காலத்தில் மக்களுள் இளமைத்தன்மை உடைய குழந்தைகளைக் குறிக்கின்றன. 'பார்ப்பு' என்பதி லிருந்து தோன்றியதே 'பாப்பா' என்பது. இவை இரண்டும் உயர்பொருட்பேறு' என்ற பொருள் மாற்றத்துக்கு ஆளாகியுள்ளன. மூங்கா, வெருகு, எலி, அணில் என்பவற்றின் சிறியனவற்றைக் குட்டி என்றும் பறழ் என்றும் அழைக்கலாம். குருளை, பறழ், குட்டி என்பன நாய், பன்றி,முயல், நரி என்பனவற்றின் சிறியனவற்றைக் குறிக்கும். பிள்ளை என்பது நாய் ஒழிந்த பிறவற்றின் சிறியன வற்றைக் குறிக்கும். ஆனால் இக்காலத்தில் பறம். பிள்ளை என்பன அவ்வாறு வழக்கில் இல்லை. மறி என்பது ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் என்பனவற்றின் குட்டிகளைக் குறிக்கும். மகவு,பிள்ளை,பறழ்,பார்ப்பு என்பன குரங்குக் குட் டியைக் குறிக்கும். இக்காலத்தில் மக்களினத்துக்கே. உரிய மகவும் பிள்ளையும் குரங்குக்கு உரியனவாக இருத்தல் சிந்திக்கத்தக்கது. குரங்கிலிருந்தே மனி தன் தோன்றினான் என்ற கொள்கைக்கு அரண் செய்வதாகும். கன்று என்பது யானை, குதிரை,கழுதை,கடமை, எருமை, மரை, மான், ஒட்டகம், கவரி, கராம் என் பனவற்றின் குட்டிகளைக் குறிக்கும். தொல்காப்பியர் காலத்திலிருந்தே ஒட்டகம் தமிழ் நாட்டிலிருந்து வந்துளது குறிப்பிடத்தக்கது. பாலைவனக் கப்பல் எனப்படும் அது, பாலைவனம் இல்லாத் தமிழ் நாட்டில் வளர்க்கப்பட்டுள்ளது.