பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 255 சேவல் என்பது மயில் ஒழிந்த பறவைகளின் ஆண் பாலைக் குறிக்கும். ஏறு என்பது ஆற்றலால் சிறந்த ஆண்பாலுக் கெல்லாம் உரியதாம். பெண்பாற் பெயர்களாவன:- பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி முதலியன. பிடி என்பது பெண்யானையைக் குறிக்கும். பெட்டை என்பது ஓட்டகம், குதிரை,கழுதை, மரை என்பனவற்றின் பெண்ணைக் குறிக்கும். பறவை களிலும் பெட்டை என்ற சொல்லுக் குரியன உள. . பேடை, பெடை என்பனவும் பெட்டை போன்ற னவே. மூன்று சொற்களும் ஒரே பொருளன. அளகு என்பது கோழி, கூகை, மயில் என்பன வற்றிற்குரியது. பிணை என்பது புல்வாய், நவ்வி, உழை,கவரி என் பனவற்றின் பெண்பால் பெயர். பிணவு என்பது பன்றி, புல்வாய், நாய் என மூன்றிற்குரியது. பிணவல் என்பது மேற்கூறிய மூன்றிற்கும் உரியது. ஆ என்பது பெற்றம், எருமை, மரை என்பன வற்றின் பெண்பால் பெயர். ஆனால் இக்காலத்தில் பசு " என்பதையே குறிக்கின்றது. இது பொருட் சுருங்குதல் என்னும் நியதிக்கு உட்பட்டுவிட்டது. ., 1977, பெண், பிணா என்ற இரண்டும் மக்களின் பெண் பாலைக் குறிக்கும். நாகு என்பது எருமை, மரை, பெற்றம் என்பனவற்றிற்கு உரியது.நீர் வாழ்வன