பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 257 களைக் குறிப்பன. தோடு, மடல், ஓலை, ஏடு, இதம். பாளை, ஈர்க்கு, குலை முதலியனவாம். 'மரம்' என்னும் பிரிவுக்குட்பட்டவைகளின் உறுப்புக்களைக் குறிப்பன : இலை, தளிர், முறி, தோடு சினை, குழை, பூ. அரும்பு,நனை, காய், பழம், தோல், செதிள்,வீழ் முதலியனவாம். தமிழின் சொல்வளம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை எண்ணி மகிழ்மின். ஏனைய மொழிகளில் இவ்வாறு காணக் கூடுங்கொல்? இவ்வாறு புறம்பே காணக்கூடியவற்றின் வேறு பாட்டுப் பெயர்களை விளக்கிய ஆசிரியர் அறிவு வகை யால் உயிர்களின் ஏற்றங்களை விளக்கியுள்ளமை இன் னும் போற்றுதற்குரியது. மரம் செடி கொடிகட்கு உயிர் உண்டு என்று அண்மைக் காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சிலர் அறைவர். தொல் காப்பியர் காலத்தில் தமிழர்கள் மரம் செடி கொடி கட்கும் உயிர் உண்டு என்பதை அறிந்திருந்தனர். உயிர் மட்டும் அன்று; அறிவும் பெற்றிருந்தன என் பதை அறிந்திருந்தனர். அறிவு வகையால் உயிர்களைப் பிரித்திருந்தனர். அப்பிரிப்பு இக்காலத்தில் உயிர் நூல் அறிவுக்குப் பொருத்தமானதாகவும் அமைந் துள்ளது. புல்லும் மரனும் ஓர் அறிவை உடையன. அவ் வோரறிவு என்பது தொட்டால் அறியக்கூடிய ஆற்றல். நந்தும் முரளும் இரண்டு அறிவுகளை உடையன. இரண்டு அறிவுகள் தொட்டால் அறிவதும், நாவால் சுவை அறிவதும் ஆம். 17-1454