பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தொல்காப்பிய ஆராய்ச்சி சிதலும் எறும்பும் மூன்று அறிவு உடையன. மூன்று அறிவாவன தொட்டால் அறிவது, நாவால் அறிவது, மூக்கால் மணம் அறிவது. எறும்புக்குக் கண் இல்லை என்று அறிவித்துள் ளார். இற்றைநாள் உயிர்நூல் புலவர்களும் அவ்வாறு கூறியுள்ளனர்1. நண்டும் தும்பியும் நான்கு அறிவுகளை உடையன. நான்கு அறிவுகளாவன உற்றறிதல், சுவையறிதல். மணம் அறிதல், கண்டு அறிதல். இவைகட்குச் செவி யறிவு இல்லை. விலங்குகள் ஐயறிவு உடையன. உற்றறிதல். சுவையறிதல், மணமறிதல், கண்டு அறிதல், கேட் டறிதல் முதலியன ஐந்து அறிவுகளாம். மக்கள் இவ்வைந்து அறிவுகளோடு பகுத்தறிவும் உடையவர்கள். மக்களில் பகுத்தறிவற்றும் இருப் பார்கள். அவர்களை மாக்கள் என்று அழைத்தல் வேண்டும் என்பர் ஆசிரியர். விலங்குகளிலும் பகுத் தறிவு உடையன உள என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்டு முன்னர் இவ்வாறெல்லாம் ஆராய்வதில் தமிழர்கள் தலைப்பட் டிருந்தனர் என்பது தமிழர்தம் அறிவாற்றலைச் சிறப் பிப்பதாகும். உயிர்களைப்பற்றி ஆராய்ந்த ஆசிரியர் உலகம் எவ்வாறு உண்டாயிற்று என்பதையும் குறிப்பிட்டுள் ளார். நிலம்,தீ,நீர்,வளி,விசும்பு எனும் ஐந்தால் ஆனது உலகம் என்று கூறியுள்ளார். இவ்வைந்தின் ஆராய்ச்சியே இன்றைய உலக வாழ்வின் உயர்நிலை .1. The Ants and Men - Page 28.