பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 தொல்காப்பிய ஆராய்ச்சி 9. செய்யுள் இயல் முன்புள்ள எட்டு இயல்களிலும் இலக்கியத்திற் குரிய பொருள்கள் பற்றியும், இலக்கிய இயல்பு பற்றி யும், இலக்கியத்தின் வாயிலாய் கருத்து வெளிப்படுத் துவதற்குத் துணை செய்வன பற்றியும் ஆராய்ந்தோம். இனி இவ்வியலில் இலக்கியம் இயற்றப்படும் முறைமை பற்றியும் அதன் வகைகள் பற்றியும் ஆராயப்புகுகின்றோம். இலக்கியத்தை ஆசிரியர் தொல்காப்பியனார் செய் யுள் என்று அழைத்துள்ளனர். செய்யுள்' என்றால் புலவரால் செய்யப்படுவது' என்று பொருள். புலவர் உயர்ந்த கருத்துக்களை உலகுக்கு அறி விக்கும் பொழுது உயர்ந்த முறையில்தான் அறிவித் தல் வேண்டும் என்று கொண்டனர். அம்முறை படிப் படியாகப் பண்புற்றுக் கேட்போர்க்கும் படிப்போர்க் கும் இன்பம் தரும் வகையில் உருப்பெற்றுள்ளது. செய்யுளில் கூறப்படும் பொருளேயன்றி செய்யுளும் இனிமையும், எழிலும் பொருந்தி - இன்பம் பயக்கும் இயல்பைப் பெற்றிருத்தல் வேண்டும். உயிர் ஒப்புயர்வற்றது தான். அவ்வுயிரும் எழிலுறு உடலில் இருக்கப் பெற்றால் தான் எல்லா ராலும் போற்றப்படும் நிலையை எளிதில் எய்தும், பொருளை அளிக்கும் கருவிதான் செய்யுள். ஆயினும்