பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 261 அக்கருவியும் அழகும். பண்பும் அமையப் பெற் றிருந்தால் தான் அகத்திற்கு மகிழ்வு தரும். ஆதலின் செய்யுள் வடிவாலும் (Form) பொருளாலும் (Content) இன்பம் பயக்கும் வண்ணம் அமை வதற்குரிய வழிமுறைகளைக் கண்டறிந்தனர் நம் முன்னோர். ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே செய்யுள் முப்பத்து நான்கு உறுப்புக் களைப்பெற்றுள்ளது. அம்முப்பத்துநான்கு உறுப்புக் களையும் அழகிய நூற்பாவில் அமைவுறக் கூறுவதைக் காணுமின், “ மாத்திரை, எழுத்தியல், அசைவகை எனாஅ+ யாத்த சீரே. அடி. யாப்பு எனாஅ, மரபே, தூக்கே, தொடைவகை எனாஅ, நோக்கே, பாவே, அளவுஇயல் எனாஅ திணையே. கைகோள், கூற்றுவகை எனாஅ கேட்போர், களனே, காலவகை எனாஅப் பயனே, மெய்ப்பாடு, எச்சவகை எனா அ. முன்னம், பொருளே, துறைவகை எனாஅ+ மாட்டே, வண்ணமொடு யாப்பு இயல் வகையின் ஆறு தலையிட்ட அந்நால் ஐந்தும்; அம்மை, அழகு, தொன்மை, தோலே, விருந்தே, இயைபே. புலனே, இழைபு எனாஅப் பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ நல் இசைப் புலவர் செய்யுள் உறுப்புஎன வல்லிதின் கூறி வகுத்துரைத் தனரே' இந்நூற்பாவே பன்முறையும் படித்தின்புறத் தக்கது. ' எனாஅ' என்பது எண்ணிக்கையை அறிவிக் கும் இடைச் சொல். அடிதோறும் வருவதால் அஃதும் இன்பம் பயந்து நிற்கின்றது. 'இருபத்தாறு' என்பதை வெளிப்படையாகக் கூறாமல்,"ஆறுதலையிட்ட அந்நாலைந்து ' எனச் செய் யுள் நலம் தோன்றக் கூறியுள்ளார்.