பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 263 அடிகள் எழுத்துக்களைக் கொண்டே வகுக்கப் பட்டன. அடிகளில் ஒற்று நீங்கிய எழுத்தே எண் ணப்படும். நான்கு எழுத்து முதல் ஆறு எழுத்து முடிய வரின் குறளடியாம். ஏழு முதல் ஒன்பது எழுத்து முடிய வரின் சிந்தடியாம். பத்து முதல் பதினான்கு முடிய எழுத்துக்களிருப்பின் நேரடியாம். பதினைந்து முதல் பதினேழு எழுத்து முடிய நெடிலடி.' யாம். பதினெட்டு முதல் இருபது எழுத்து முடிய கழிநெடிலடியாம். பிற்காலத்தார் சீர்களைக் கொண்டே அடிகளை வகுத்தனர். பாக்களுக்குரிய அடி, தொடை முதலி யன விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பாக்கள் ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ் சிப்பா, மருட்பா, பரிபாடல் எனக் கூறப்படும். இவைகளுக்கு அடி வரையறை உண்டு. " 'எழுத்து முதலா ஈண்டிய அடியின் குறித்த பொருளை முடிய நாட்டல் யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர்" என்று கூறி, "பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே, அங்கதம், முதுசொல்" என்பன வாம் ஏழு வகையிலும் அந்த யாப்பு முறை வரும் என்று கூறுகின்றார். இம் முறையே தமிழகத்தில் தொன்றுதொட்டு வருவது என்று” வரையறுத் துள்ளார்.உரையும் யாக்கப்படுவதால் (செய்யப் படுவதால்) யாப்பு எனப்பட்டது. ஆதலின் உரை நடை இயற்றுவோரும் புலவரே என மதிக்கப்பட் டனர். இவைகள் அறம் பொருள் இன்பம் என்பன வற்றையே விளக்குதற்குரியன என்றார். “ அங்நிலை மருங்கின் அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும் உரிய என்ப”