பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பொருள் 265 கூறுவனவும் சிறந்த இலக்கியங்களாக அமையும். அவை புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவை மடக்கியல், செவியுறிவுறூஉ என அழைக்கப்படும். புறநிலை வாழ்த்து:- " வழிபடு தெய்வம் நின்புறங் காப்ப பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலியின் " என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ. ஆசிரியப்பாவினாலும், வெண்பாவினாலும் கூறப்படும் புறநிலை வாழ்த்து. தெய்வம் புறத்தே (பக்கத்தே) நின்று காப்ப என்று வேண்டியதனால் இப்பெயர் பெற்றது போலும். வாயுறை வாழ்த்து:- “வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்கும் என்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.' வாய் உறை என்பதற்கு வாய் மொழியாகிய மருந்து என்றார் பேராசிரியர். அறிவுரையானது உளப் பிணியைப் போக்குதலின் மருந்து எனப்பட்டது. மருந்து இனிப்பாக இருத்தல் அரிது. அறிவுரையும் வேம்பும், கடுக்காயும் போலும் கசப்பினைத் தரக் கூடியதே. முன்பு கசந்தாலும், பின்பு இன்பம் தருவ தாம் வெஞ்சொல் போலத் தோன்றும். ஆனால் அவ் வெஞ்சொல் பின்னர் வாழ்வில் நலம் பயக்கும். இம் முறையில் தோன்றிய பாடல்கள் பல நல்ல இலக்கியங் களாக அமைந்துள்ளன. அவை அடக்கியல்:-