பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

266 தொல்காப்பிய ஆராய்ச்சி அவை யடக்கியலே அரில்தபத் தெரியின் வல்லார் கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே" புலவர் தம் அடக்கமுடைமையை அறிவித்துப் பிறரை அடக்கிவிடும் ஆற்றல் பெற்றவர்கள்.தாம் அடங் கினால் பிறரை அடக்கலாம் என்ற பேருண்மை பொதிந்து கிடப்பதே இவ்வுலக இலக்கியம். தொண் டரே தலைவராவார் என்பது வாழ்வுக்கு இன்றியமை யாத உண்மையாகும். செவியுறை:-

  • பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செயியுறுத் தற்றே."

செவியுறை என்பதும் செவி மருந்து எனப் பொருள் படும். பெரியோரிடை அடங்கியிருக்கும் ஆற்றல் யாவர்க்கும் வேண்டியது. பெரியாரைத் துணைக் கொள்வோரே பெரிதும் நலமுடன் வாழ்வர். பெரியாரைத் துணைக்கொள்ளக் கருதின் பெரியார் நடுவில் அடங்கியிருத்தல் கடனாகும். இந் நான்கும் வாழ்வுக்கு நலம் பயப்பதோர் இலக்கிய வகைகளாகும். இவைகளுக்குரிய பாக்கள் இன்னவென்றும் குறிப்பிட்டுக் கூறுகின்றமை நோக்கத்தக்கது. பரிபாடல் என்பது கொச்சகம், அராகம். சுரிதகம், எருத்து என்னும் உறுப்புக்களுடன் காதல் பற்றியே கூறுவதற்கு உரியது. கைக்கிளை என்பது வெண்பாவும், ஆசிரியப்பாவும் கலந்து முடிவதற் குரியது. அங்கதம் (Satire) வசையும், நசையும் பொருந்தி வரும் இயல்பினது.