பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
268

தொல்காப்பிய ஆராய்ச்சி விரும்பியிரார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாக்களையே விரும்பியிருக்கக்கூடும். ஆதலின் உரை நடை வளர்ச்சி ஓங்கிப் பெருகுவது தடைப்பட்டிருத் தல் கூடும். அச்சுக்கூடம் வந்த பின்னரே உரைநடை நூல்கள் பெருகின. ஆசிரியர் காலத்தில் வழக்கிலிருந்த நால்வகை உரைநடைகள் "பாட்டிடை வைத்த குறிப்பு" என் றும், 'பாவினின்று தோன்றிய கிளவி' என்றும், பொருள் மரபில்லாப் பொய்ம் மொழி' என்றும், பொருளொடு புணர்ந்த நகைமொழி" என்றும் அழைக்கப்பட்டன. 01 இவ்வாறு உரையாலும் பாட்டாலும் கூறப்பட்ட பொருள்கள் காதல் வாழ்வும் கற்பியல் வாழ்வுமே. மக்களைப் பற்றியும், அவர்களைச் சூழ்ந்துள்ள இயற்கையைப் பற்றியும் இலக்கியப் பொருள்களாகக் கொண்டு, கற்பனையும், உணர்ச்சியும் வெளிப்பட நூல்கள் இயற்றுவதே புலவர் தொழிலும் இயல்பும் கடனுமாக இருந்தன. கற்பனையும் உணர்ச்சியுமே இலக்கியத்தைச் சுவைப் படுத்தும். ஆகவே புலவர். ஞாயிறு, திங்கள், அறிவே, நாணே, கடலே, கானல், விலங்கே, மரனே. புலம்புறு பொழுதே, புள்ளே, நெஞ்சே, அவையல பிறவும், நுதலிய நெறியான் சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லி யாங்கு அமையும்' வகையில் இலக்கியங்களை யாத்தல் வேண்டும் என்ற னர் ஆசிரியர். பாடல் என்பது கற்பனையும் உணர்ச்சியும் என இரண்டின் வாயிலாய் வாழ்க் கையை விளக்குவது; (Poetry is an interpretation of life through the imagination and the feelings) QLOTL ,