பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 களைத் தம் மொழிக்கு ஊறு பயவாது நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்துதல் கூடும். பிற மொழிகளைக் கற்றல் தொல்காப்பியர்க்கும் உடன்பாடே என்பது வழி நூல் வகைகளுள் மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலையும் சேர்த்திருப்பதனால் அறியலாகும். பிற மொழிப் புலமை என்றும் பெருமைப்படுத்தப்பட்டு வரு. கின்றது யாவரும் அறிந்ததே. தம் மொழியில் புலமை கொள்ளாமல் பிற மொழிப் புலமையை விரும்புதலும், தம் மொழி மறந்து பிற மொழி போற்றிக் கற்றலும் வெறுக்கத்தக்கன. பிறர் கட்டாயமின்றி தம்மியல்பால் வேட்கை மிகுந்து பிற மொழிகளைக் கற்றலும் அவற் றுள் புலமை பெறுதலும் வரவேற்கத்தக்கனவே. ஆகவே தொல்காப்பியரின் ஆரிய மொழிப் புலமை வரவேற்கப்பட்டுப் பாராட்டப்பெற்றுள்ளது என் று அறிதல் நன்று. தொல்காப்பியர் காலத்தில்தான் ஆரியம் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கி இருக்க வேண்டும். தமிழகத் தில் முதன் முதலாகக் குடியேறிய வேற்று நாட்டார் வட ஆரியரே. அவருள்ளும் மொழிநூற் புலமையும் ஒழுக்க மேம்பாடும் பிறர்க்கென வாழும் பெற்றிமையும் கொண்ட ஆரியரே தமிழகச் சான்றோருடனும் அரசர் களுடனும் தொடர்பு கொண்டனர். ஆரிய மொழிப் புலவரும் தமிழ்மொழிப் புலவரும் நட்புடன் அளவளாவி உறவாடினர். "கற்றாரைக் கற்றாரே காமுறுவர் அன்றோ? எவரையும் வரவேற்று இன்ப வாழ்வு நல்கும் பண்டைத் தமிழர் வட ஆரிய வாழ்வளித்ததில் வியப்பின்று. வரவேற்று தமிழரையடிமை யாக்கித் தமிழ் மொழியை ஒழிக்கும் உள்ளத்துடன்