பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 269 கருவியாக வாழ்க்கையை வெளிப்படுத்துவதே இலக் கியம்" என்று ஆங்கில இலக்கிய ஆராய்ச்சியாளர் அட்சன் கூறுவது போன்று ஆசிரியரும் கூறியுள் ளமை அறிந்து இன்புறத் தக்கது. இருபது வண்ணங்களும் எட்டு வனப்புக்களும் இலக்கியங்களின் உறு ப் பு க்களாய் இலங்கின பான்மை எடுத்துக் கூறுகின்றமையால் அன்று தமிழிலக்கியம் எவ்வாறு வளம்பெற்று வாழ்ந்தது என்பதைத் தெற்றென அறியலாம். பெரும்பாலான வண்ணங்கள் எழுத்துக்களின் சேர்க்கை பற்றிய முறையினாலேயே அமைந்துள்ளன. எழுத்துக்களை அமைக்கும் ஒழுங்கால் ஓசை தோன்றி இன்பம் பயப் பது இலக்கியத்தின் இயல்புகளுள் ஒன்றாகும். இவ் வியல்பில் தமிழ் நன்கு முற்றுப் பெற்றுள்ளது. வண்ணங்களாவன:-- " பாஅ வண்ணம்; தாஅ வண்ணம்; வல்லிசை வண்ணம்; மெல்லிசை வண்ணம்; இயைபு வண்ணம்; அளபெடை வண்ணம்; நெடுஞ்சீர் வண்ணம்; குறுஞ்சீர் வண்ணம்; சித்திர வண்ணம்; நலிபு வண்ணம்; அகப்பாட்டுவண்ணம்: புறப்பாட்டு வண்ணம்; ஒழுகு வண்ணம்; ஒரூஉ வண்ணம்; எண்ணு வண்ணம்; அகைப்பு வண்ணம்; தூங்கல் வண்ணம்; ஏந்தல் வண்ணம்; உருட்டு வண்ணம்; முடுகு வண்ணம்" என இருபதாம். அவற்றுள்,