பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 தொல்காப்பிய ஆராய்ச்சி 1. பாஅ வண்ணம் சொற் சீர்த்தாகி நூற்பால் பயிலும். இது நூற்பாவினுள் - சூத்திரங் களில் - சொற்சீர் பெற்றுவரும் பெற்றியது. 2. தாஅ வண்ணம் இடையிட்டு வந்த எதுகைத் தாகும். 3. வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயிலும். 4. மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. 5. இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. 6. அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். 7.நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். 8. குறுஞ்சீர்வண்ணம் குற்றெழுத்துப்பயிலும். 9. சித்திர வண்ணம் நெடியவும் குறியவும் நேர்ந் துடன் வருமே. 10. நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். 11. அகப்பாட்டு வண்ணம் முடியாத் தன்மை யின் முடிந்ததன் மேற்றே. 12. புறப்பாட்டு வண்ணம் முடிந்தது போன்று முடியாததாகும். 13. ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும். 14. ஒரூஉ வண்ணம் ஓரீஇத் தொடுக்கும். 15. எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும். 16. அகைப்பு வண்ணம் அறுத்தறுத்து ஒழுகும். 17. தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்.