பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 271 18. ஏந்தல் வண்ணம் சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும். 19. உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும். 20. முடுகு வண்ணம் முடிவறியாமல் அடியிறந் தொழுகி அதனோரற்றே. பொருள் மிக எளிதாக விளங்குகின்றது. விரிவு விளக்கம் வேண்டியதின்று, 'பா' என்பது ஓசையால் உருவானது. இன்னோசை தருவதே இவ்வண்ண முறை. இவ்வண்ணங்கள் பயில இக்காலத்தில் பாக் கள் இயற்றுவார் யாருமிலரே. இவைகளைப் பெயரள வில் அறிந்தோரும் மிகச் சிலரே. இனி வனப்பெனப்படும் எட்டும் வருமாறு:- 1. அம்மை : சிலவாய் மெல்லிய சொற்களால் இடையிட்டு வந்த பனுவல் இலக்கணத்தோடு குறை அடிகளால் வருவது. பதினெண் கீழ்க்கணக்கு நூல் கள் இதற்கு எடுத்துக் காட்டாகும் என்பர். திரு வள்ளுவர் செய்த திருக்குறள் இவ் வனப்பைக் கொண்டு இலங்குகின்றது. 2. அழகு: வழக்குச் சொல்லின்றிச் செய்யுட்கே உரிய செந்தமிழ்ச் சொற்களால் சீர்கள் அமைய இயற் றப்படுபவை. அக நானூறு முதலிய தொகை நூல் களை எடுத்துக் காட்டாகக் கூறுவர். 3. தொன்மை: உரைநடையால் இயற்றப்பட்ட பழமையான வரலாறுகள், கதைகள் முதலியன. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று கூறிப் பெருந் தேவனாரால் செய்யப்பட்ட பாரதமும் தகடூர் யாத்திரையும் போல்வன எடுத்துக் காட்டென்பர் பேராசிரியர். 'உரையொடு புணர்ந்த" என்பதற்கு