பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 275 முடிப்புரை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற் பட்ட தமிழக நிலையை அறிவதற்கு நமக்குக் கிடைத் துள்ள ஆவணங்களுள் தொல்காப்பியமே முதன்மை யானது. மக்கள் வரலாற்றை அறிவதற்குத் துணை புரிவனவற்றுள் மொழியே முதலிடம் பெறுவது. மொழியானது மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்து ஒன்றுபட்டுள்ளது. மக்களின்றி மொழிக்கு வாழ் வில்லை; மொழியின்றி மக்களுக்கு வாழ்வு இல்லை ஆதலின் மொழியின் துணைகொண்டு மக்கள் வாழ்வை அறிதல் இயலும். தமிழ் மொழியின் துணையால் தமிழ் மக்கள் வாழ்வைத் தட்டின்றி அறியலாம். தமிழ் மொழியைப் பற்றியும் தமிழ் மக்களைப் பற்றியும் அறிவிப்பதே தொல்காப்பியம். 'தொல்காப்பியம்' என்ற பெயர் எவ்வாறு உண் டாயிற்று. ஆக்கியோர் பெயர் தொல்காப்பியர். தொல்காப்பியரால் இயற்றப்பட்டது தொல்காப் பியம் என அழைக்கப்பட்டது என்பர் ஒரு சாரார். தொல்காப்பியரால் ஆக்கப்பட்ட நூல் தொல்காப் என்று அழைக்கப்பட்டது வடமொழி மர பாகும். அம்மரபு தமிழிற்கு இல்லை. தொல்காப்பிய ரால் ஆக்கப்பட்ட நூலைத் தொல்காப்பியர் என்று கூறுவதேதமிழ் மரபு. ஆதலின் "தொல்காப்பியம்' பியம்