பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 தொல்காப்பிய ஆராய்ச்சி என்ற சாரார். பெயரே தவறுடைத்து என்பர் பிறிதொரு நூலின் பெயரென்ன? நூலை இயற்றிய ஆசிரியர் பெயரென்ன? என்று அறியவேண்டியது நமது கட னாகும். நூலின் பெயர் தொல்காப்பியம்; தொல்காப் பியம் எனும் நூலை இயற்றிய பின்னர், இயற்றிய ஆசிரியர் தொல்காப்பியர் என அழைக்கப்பட்டார் என்பதே நமது கருத்து. இவ்வாறு கூறுவதுதான் பொருத்த முடைத்து என்பதனைப் பனம்பாரனார் பாயிரமும் பகர்கின்றது. தொல்காப்பியன்" எனத் தன் பெயர் தோற்றி என்று கூறுவதை நோக்குக. அதன் பொருள் என்ன? தொல்காப்பியன்' எனத் தன் பெயரைத் தோன்றச் செய்து என்பதன்றோ அவ்வடிக்குப் பொருள். தொல் காப்பியத்தை இயற்றுவதற்கு முன்னர் வேறு பெயர் பெற்றிருந்த ஆசிரியர், தொல்காப்பியத்தை இயற்றிய பின்னர் தொல்காப்பியன் என அழைக்கப்பட்டார். செல்வத்துக்குரியவன் செல்வன் எனப்படுவதுபோல் தொல்காப்பியத்துக் குரியவன் தொல்காப்பியன் எனப்பட்டான். செய்யுளில் தொல்காப்பியன் என்று கூறுவதே மரபு. வழக்கில் தொல்காப்பியர் என்று கூறுவதுதான் மரபு. இம் மரபினைத் தொல்காப்பி யரே அறிவிக்கின்றார். 16 'ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கிள் சொல்லா றல்ல. ஆதலின் பனம்பாரனார், செய்யுளில் தொல்காப்பியன் எனக் கூறியிருப்பினும் நாம் வழக்கில் தொல்காப் பியர் என்று அழைத்தலே மரபு. தொல்காப்பியம்