பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 277 இலக்கணமன்றோ? அதனைக் காப்பியம் என்றது ஏன்? தொல் என்ற அடைகொடுத்து அழைத்தது ஏன்? எனும் வினாக்கள் எழலாம். காப்பிய காப்பியம் என்று தொல்காப்பியர் (அவரின் முன்னைய இயற்பெயர் அறியோம். ஆதலின் நாமும் தொல்காப்பியர் என்ற பெயரால் அழைக்கின்றோம்) நூல் இயற்றியது எழுத்தும் சொல்லும் பொருளும் அறிந்து காப்பியம் கற்பதற்கும் இயற்றுவதற்குமேயாகும். இலக்கணம் கூறும் நூலைக் அழைத்தல் தமிழ் மரபுக்கு ஒத்ததுதான். எழுத்து இலக்கணம் கூறும் நூலை எழுத்து என்பதும், சொல்லிலக்கணம் கூறும் நூலைச் சொல் என்பதும் இயல்பன்றோ? அவ்வாறே காப்பிய இலக்கணம் கூறும் நூலைக் காப்பியம் என்றனர். 'தொல்' என்ற அடைமொழி எற்றுக்கு? காப்பியம் என்றலே பொருந்துமே எனவினவலாம். அவர் கூறும் காப்பிய இலக்கணங்கள் தமிழகத்தில் அவர்க்கு முன்பே தொன்றுதொட்டுப் பயின்று வருவன. அவற்றைத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கூறுகின்றார். ஆதலின் தொன்மையாக வருகின்ற காப்பிய இலக்கணங்களைக் கூறும் நூல் என்று உணர்த்தவே தொல்காப்பியம் என்று பெயர் சூட்டி யுள்ளார். தொல்காப்பியம் எனும் சொல்லுக்கு இன்னொரு பொருளும் உண்டு. தொன்மையான இலக்கிய மரபு களைக் காத்து நிற்பது என்பதே அது. இலக்கிய மரபுகள் என்பதும் காப்பிய இலக்கணம் என்பதும் வேறுபட்டன் அன்றே. ஆதலின் நூலின் பெயர் தொல்காப்பியம்; அதனை ஆக்கியோன் தொல்காப்பி யன் எனப்பட்டான். தொல்காப்பியன் என்ற பெயர் வழக்கில் வர இயற்பெயரை மறந்து விட்டனர். 17B-1454