பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 279 நாட்டிற்கு வந்து பழந்தமிழோடு தொடர்பு கொண்ட பிறகுதான் எழுதும் முறையை ஆக்கிக்கொண்டது. தமிழோ ஆரியத்தோடு தொடர்பு கொள்வதற்கு முன்பே தனக்கென எழுத்தையும் நூலையும் பெற் றுள்ளது. ஏன்? இந்திய மொழிகளின் தாயே தமிழ் தான். ஆரியம் இந்நாட்டுக்கு வரும் முன்பு இமயம் முதல் குமரிவரை வழங்கிய மொழி தமிழே. ஆரிய மும் தமிழும் கலப்புற்றதனால் விளைந்ததே இந்திய மொழிகளின் தோற்றம். மொழியின் அமைப்பும் அடிப்படையும் தமிழாய் இருக்க, சொற்கள் ஆரியத் திற்குரியனவாய் இருக்கின்றன. ஆதலின் இந்திய மொழிகளை ஆரியக் குடும்ப மொழிகள் என்றும் தமிழ்க் குடும்ப மொழிகள் என றும் இருவேறு இனமாகப் பிரித்துள்ளனர் மொழி யாராய்ச்சியாளர்கள். தமிழ்க்குடும்ப மொழிகளைத் திராவிடக் குடும்ப மொழிகள் என்பர். 'திராவிடம்' என்ற சொல்லிலிருந்தே 'தமிழ்' என்ற சொல் தோன்றியது என்ற கருத்து பிழைபட்டது என்று நிலைநாட்டப்பட்டு விட்டது கி.மு. ஏழாம் நூற் றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தொல்காப்பியத் தில் தமிழ் எனும் சொல் பயின்றுள்ளது. 'திராவிடம்' என்ற சொல்லின் தோற்றம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. தமிழ்க் குடும்ப மொழிகள் திருத்த முற்றன ஆறு: திருத்த முறாதன ஆறு எனப் பன்னிரண்டு மொழிகள் இன்றும் உள்ளனவாக அறிஞர் கால்டு வெல் அவர்கள் ஆராய்ந்து நிறுவியுள்ளனர். ஆரியத்தின் வருகையால் தமிழ் சிதைவுற்றுக் கிளைகளாகப் பிரிந்து தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் தென்குமரியாயிடை மட்டும் வழங் 18-1454