பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 தொல்காப்பிய ஆராய்ச்சி மக்களுக்குப் பயன்படும் முறையாலேயே மொழி வளர்கின்றது என்றாலும், அதன் வளமும் செழிப்பும் செறிவும் அதன் இலக்கியத்தினாலேயே பெறவேண்டி யுள்ளது. ஒரு மொழியின் வளர்ச்சிப்போக்கில் மாறுதலுற்றுப் பிரிந்து சிதைந்து மறைந்து போகாமல்இருப்பதற்குத் துணைசெய்வது இலக்கியமே. மொழியிலிருந்து தோன்றுவது இலக்கியம்; இலக்கியத்தால் வளம்பெறுவது மொழி. ஆதலின் தமிழின் வளத்தைப் பெருக்குவதற்குத் தமிழில் இலக்கியங்கள் பெருகிக்கொண்டே இருத்தல் வேண்டும். இன்று தமிழ் நாட்டில் எழுத்தாளர்களும் புலவர் களும் பெருகி வருகின்றனர். மறுமலர்ச்சி எழுத் தாளர்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்டு சிலர் கட்டுரைகள் எழுதுகின்றனர்; பாடல்கள் இயற்று கின்றனர். அவர்கள் தமிழிலக்கண மரபை அறியா மலும் தமிழிலக்கிய மரபைப் புறக்கணித்தும் கருத்துச்செறிவின்றி நடையழகு இன்றி எழுதிக் குவிக்க முற்படுகின்றனர். முன்னோர் எழுதிய இலக்கண இலக்கியங்களைக் கற்றாலன்றி நடையழகும் பொருட்செறிவும் பெறுதல் இயலாது. (No writer will ever become a master of prose unless his style is rooted in the past. It is in the acknowledged masterpieces of the past that the manners of writing are learnt, and it is through acquaintence with them that words come to have a rich burden of associations beyond their precise meaning. Literature, both in the matter and in its manner, hands down a tradition and the writer who is not in touch with that traditions likely to be a parvenu both in his use of words, and in his judgment of contemporary work - Robert Lynd.)