பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 283 ஆதலின் எழுத்தாளராகவும் புலவராகவும் ஆக விரும்புவோர் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் பிற இலக்கியங்களையும் நன்கு கற்றல் வேண்டும். கற்றதன் பயனால் நல்ல இலக்கியங்களைப் படைக்க இயலும். இன்று தமிழ் நாட்டில் இலக்கிய வறுமை இனிதே ஆட்சி புரிகின்றது. பிற நாட்டார் தலைவணங்கும் இலக்கியங்கள் சில நூற்றாண்டு களாகத் தோன்றவே இல்லை. பிற துறைகளில் உண்டாகும் வறுமையைப் பிற நாட்டினர் துணை கொண்டு போக்கிக்கொள்ள இயலும். ஆனால் இலக்கிய வறுமையைப் போக்கப் பிற நாட்டினர் துணை பயன்படாது. இந்நாட்டில் உள்ளவர் களிடையே இனிய புலவர்கள் தோன்றுதல் வேண்டும். தோன்றும் புலவர்கள் தொல்காப்பியத் தைக் கற்று அதன் மரபினை அறிந்துகொள்ளுதல் வேண்டும். அறிந்து அகமும் புறமும் வண்ண மும் வனப்பும், நூலும் உரையும், ஆற்றுப்படையும் பாடாண் பாட்டும் மீண்டும் மலரச் செய்தலில் ஊக்கம் காட்டுதல் வேண்டும். ஆனால் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட நூலாயினும் இன்னும் கற்பதற்குரிய நிலையிலே உள்ளது தொல்காப்பியம். அயல் மொழிகள் வந்தன; ஆட்சி புரிந்தன. என்றுமுள தென்தமிழை முழுதும் அழித்துவிட இயலவில்லை. சில பகுதிகளில் உருமாறி வேற்றுப் பெயர்களால் அழைக்கப்பட்ட போதிலும் தமிழின் அடிப்படை அமைப்பும் இயல்பும் மறைந்துவிட வில்லை. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள்.