பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 தொல்காப்பிய ஆராய்ச்சி " பல்லுயிரும் பலஉலகும் படைத்தளித்துத் துடைக்கினும் நீர் எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பது போல் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமைத்திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே ' என்று கூறும் தமிழ் வணக்கத்தில் இக்கருத்தைத் தான் வெளிப்படுத்தியுள்ளார்கள். ' என்றும் உள தென் தமிழ்' என்று கம்பர் கூறியதும் இதனாலேயாம். தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும். பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும். இன்று அது நாட்டுமொழியாகும் நிலையை அடைந்துள்ளது. அஃதாவது நாட்டாட்சி மொழி யாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உயர்கல்வி கற்கும் ஊடுமொழி (Modium of instruction) யாக இன்னும் ஆகவில்லை. அறிவியற் கலைகளும் பிறவும் தமிழால் கற்பிக்க முடியாது என்று இன்னும் தமிழர் களே ஐயுறுகின்றனர். தமிழால் ஆளமுடியாது என்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாகப் பலரும் புகழ நாடாண்ட தமிழ்.ஏன் ஆளமுடியாது என்று கேட்டு இன்று ஆளத்தொடங்கியுள்ளது. அது போல பல கலைகளும் வளர்வதற்குக் கருவியாய் இருந்த தமிழ் அறிவியற் கலைகளுக்கும் மனித இயல் கலைகளுக்கும் ஏற்ற ஊடுமொழியாக அமையும் என்பதில் எட்டுணை யும் ஐயமில்லை. . தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்ற