பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஆதலின் தொல்காப்பியர் காலம் வடமொழி ஐந்திரத்திற்குப் பிற்பட்டதே என் m கொள்ளுகல் மிகவும் ஏற்புடைத்தே. 1 அன்றியும் வடமொழியாளர் தென்னாட்டில் குடிபுகத தொடங்கிய காலமே தொல்காப்பியர் காலமென்றும் கொள்ளலாம். தொல்காப்பியர் நூலுள் அவரே கூறுவனவும் பிறர் கூற்றை எடுத்துக் கூறுவனவும் ஆய இருவகை நூற்பாக்களைக் காணலாம். தம் காலத்திற்கு முன்பே யுள்ள பிறர் நூல்களிலிருந்து வரும் விதி முறைகளைக் கூறுங்கால்,'எனப்படும், 'என்ப' 'என்மனார்' என்று கூறியுள்ளார். தாமே வகுக்கும் விதிமுறைகளை அங்ஙன மின்றித் தாமே கூறுவதுபோல் கூறியுள்ளார். எடுத்துக் காட்டாக முதல் இரண்டு நூற்பாக்களை நோக்குவோம். முதல் நூற்பா எழுத்தெனப்படுப 1 அகர முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே.* இந் நூற்பாவால், தமிழ் எழுத்துக்கள் தொல்காப்பியர் காஸத்துக்கு முன்பே படைக்கப்பட்டு, முப்பதாக் எண்ணப்பட்டன என்றும், அவை 'அ'வை முதலாகவும் 'ன'வை இறுதியாகவும் கொண்டிருந்தனவென்றும் பாணினிக்கு முன் 64 வடமொழி இலக்கண நூல்கள் இருந்தன வென்றும் அவற்றுள் ஐந்திரம் முதலாவது என்றும் கூறுப. அங்ஙன மாயின் ஐந்திரம் பாணினிக்கு நெடுநாள் முன்னரே வழக்கிலிருந் திருக்க வேண்டும். பாணினீயம் தோன்றியது கி. மு. ஏழாம் நூற் றாண்டில் என்றால் அதற்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு முன்னேயே, ஐந்திரத்தின் காலத்தில் தொல்காப்பியம் தோன்றி யிருத்தல் வேண்டும். இலக்கிய வரலாறு பக்கம்-66.