பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 அங்ஙனம் வழக்கில் உள்ளதைத் தொல்காப்பியர் எடுத்துரைத்துள்ளார் என்றும் அறிகின்றோம். இரண்டாம் நூற்பா "அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன." இந் நூற்பாவால், குற்றியலிகரம், குற்றியலுகரம். ஆய்தம் என்ற மூன்று சார்பெழுத்துக்களையும் தொல் காப்பியரே மொழி வழக்கில் காணப்படும் எழுத்தொலி நுட்பத்தை அறிந்து கூறியுள்ளார் என்றும் அறி கின்றோம். இனி வடமொழிச் சொற்களை (பெயர்களை)த் தமிழில் எடுத்தாளுங்கால் எவ்வாறு கூற வேண்டு மென் று ஆணையிடுகின்ற நூற்பாவை நோக்குவோம். "வடசொற்கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே". வடமொழிப் பெயர்களைத் தமிழில் எடுத்தாளும் இன்றியமையாத நிலை ஏற்பட்டால். அப் பெயரின் வட மொழி எழுத்துக்களை நீக்கிவிட்டுத் தமிழ் எழுத்து ஒலி யால் சொல்லுதலும், தமிழ் எழுத்தால் எழுதுதலும் செய்தல் வேண்டுமென்று இந்நூற்பாவால் தொல்காப்பியர் விதி செய்துள்ளார். ‘லக்ஷ்மண’ என்பதனை இலக்குவன்' என்றே எழுதுதலும் சொல்லுதலும் வேண்டும் என்பதாம். தொல்காப்பியர்க்கு முற்பட்டகாலத்தில், வடசொற்கள் தமிழில் எடுத்தாளப்படுவதற்கு எவரேனும் விதி கூறி யிருப்பரேல் அவ் விதியைச் சுட்டி 'என்ப' என்றோ,