பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தால் என்மனார் என்றோ கூறியிருப்பர். அங்ஙனம் கூறாத தனால், தொல்காப்பியரே இப்புது விதியை வகுத் துள்ளார் என்று உணரல் வேண்டும். காப்பியர்க்கு முன்பு பல இலக்கண நூலாசிரியர்கள் இருந்துள்ளமை தொல்காப்பியத்தாலேயே நன்கு உணரலாகும். அவருள் எவரும் வடமொழிச் சொற்கள் தமிழில் புகுவதற்கு விதிவகுத்துக் கூறினாரிலர். ஆகவே தொல்காப்பியர்காலத்தில்தான் வடமொழிச் சொற்கள் தமிழில் புகத் தொடங்கின என்று உய்த்துணரலாகும். ஆதலின் தொல்காப்பியர் காலத்தில்தான் வடமொழி யாளர் கூட்டுறவு தமிழர்க்கு ஏற்பட்டு வடமொழிச் சொற்கள் தமிழில் புகத் தொடங்கி இருத்தல் வேண்டும் என்பது தெளிவாகின்றது. எனவே வடமொழியாளர் தமிழகத்திற்கு வந்த காலத்தைத் தெரியின் தொல்காப் பியர் காலத்தையும் எளிதில் தெரியலாகும். வடமொழியாளர் தமிழகத்தின்மீது படையெடுத்து வந்து தமிழரசர்களை வென்று தமிழகத்தில் குடியேறினா ரிலர். ஒரே முறையில் பெருங்கூட்டமாய்த் தமிழகத்தில் புகுந்து குடியேறித் தங்கினார் என்றும் கூறுதல் பொருந்தாது. ஆரியர்கள் வடநாட்டில் குடியேறி வாழ்ந்த காலத்தில் தமிழகம் பலவகையானும் சிறப் புற்று விளங்கியது. ஆதலின் தமிழகச் சிறப்பைக் கேள்வியுற்ற புலவர்களும் கலைஞர்களும் அறிஞர்களும் தமிழகத்திற்கு வந்து அரச அவைகளில் வீற்றிருக்கும் பேறு பெற்றிருத்தல் வேண்டும். பின்னர்ப் பிழைப் பிற்குப் புகலிடம் தேடியோர் தமிழகத்தை நாடியிருத்தல் வேண்டும். ஆகவே சிறு சிறு கூட்டமாக வந்து அரச ரிடமும் புலவர்கள் முதலியோரிடமும் உறவுகொண்டு வாழ்ந்திருத்தல் கூடும். அங்ஙனம் வந்து கலந்தமை புத்தர் தோன்றுவதற்கு முன்பாகத்தான் நிகழ்ந்