பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 திருத்தல் வேண்டும். புத்தர் தோன்றிய பின்னர் புத்தமதத்தைப் பரப்புவான் வேண்டி வடநாட்டிலிருந்து பலர் வந்துள்ளனர். அவர்கள் தொல்காப்பியர் காலத்தில் வந்திருப்பின், புத்தமதத்தைப்பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் காணக் கிடைக்கும். அங்ஙனம் ஒன்றும் கிடைக்கப் பெறாமையால், புத்தர் காலமாம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னரே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும். ஆரியர் தமிழகத்திற்கு வந்தகாலம் கி.மு.ஏழாம் நூற் றாண்டு ஆகலாம் எனப் பேராசிரியர் வி. அரங்காச்சாரி யார் கருதுகின்றனர்! . ஆதலின் தொல்காப்பியர் கால மும் கி.மு. ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று முடிவு கட்டுவதில் தவறின்று. ' இக்காலம் பாணினிக்கு முற்பட்டதும், ஐந்திரத்திற்குப் பிற்பட்டதும் ஆகின்றது. ஆரியர்கள் வடஇந்தியாவில் நிலைத்து நாளடைவில் இந்தியா முழுதும் பரவித் தெற்கே வாழ்ந்த திராவிடர். களுடன் தொடர்புகொண்டு தம் கலையையும் நாகரிகத் தையும் அவர்களிடையே பரப்பி வெற்றிகொண்ட காலம் கி.மு.1030-320 என்று ஆர்.சி.தத்தர் கூறி யுள்ளமை நோக்கத்தக்கது. ஆதலின் தொல்காப்பியர் காலத்தை நாம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்று கொள்வது முற்றிலும் பொருந்தும். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்புள்ள தமிழக நிலையை அறிவதற்குத் தொல்காப்பியம் மிகவும் துணையாய் உள்ளது. 1 Educational Review-Ocoter 1928. 2 Early Hindu Civilization Pages 12. 13. 24. 212, 213.