பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஆகவே தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் வாழ்வு என்பனபற்றி இக்கால மொழிநூல் இலக்கிய ஆராய்ச்சி, வாழ்வியல் முதலியவற்றுடன் பொருத்தி ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டதாகும். இன்று நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல் களுள் தொல்காப்பியமே தமிழர் வாழ்வின் பல்துறை பற்றி அறிவதற்குத் துணைபுரிவதாகும். இதனை தமிழ்ப்புலவர் மட்டுமே தேர்வுகருதிக் கற்று வருகின்ற னர். இஃது இலக்கண நூல் தான் என்றாலும் ஏனைய மொழிகளில் உள்ள இலக்கண நூல் போன்றதன்று; அண்மை நூற்றாண்டில் தோன்றி வளர்ந்து வரும் மொழியாராய்ச்சியும், மேலை நாட்டவரால் விரும்பிப் போற்றப்பட்டுவரும் இலக்கிய ஆராய்ச்சியும், பண் பாட்டுக் கலைகளாம் உயிரியல், உளவியல். வாழ்வியல் முதலியனவும் தன்னகத்தே கொண்டு இலங்குகின்றது. உயர் கலைகளுக்கெல்லாம் பிறப்பிடமாகக் கிரேக்க நாட்டையே கூறுவர். ஆனால் தொல்காப்பியத்தை ஆராய்ந்து கற்போர் அவ்வாறு கூறார்; பல உயர் கலை களுக்குப் பிறப்பிடம் தமிழகமே என்று தலை நிமிர்ந்து சாற்றுவர். ஆகவே தொல்காப்பியர் வழி நின்று எழுத்தும் சொல்லும் பொருளும் (இலக்கியமும்) ஆராய்ந்து தமி ழகத்தின் ஏற்றம் கண்போம்.