பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 எழுத்து 'மொழி' மக்களின் அறிவாற்றல் வளர்ச்சியால் மக்களின் கூட்டு வாழ்விற்கு இன்றியமையாத தாகப் படைத்துக்கொள்ளப்பட்ட கருவியாகும். மொழியே மக்களை மாக்களிலிருந்து வேறுபடுத்தி. உயர்த்தியதாகும். மொழியின்றேல், மக்கள் வாழ்வு விலங்கின் வாழ்வாகவே இருக்கும் என்பதில் எள்ள ளவும் ஐயமின்று. நாடு நகரங்கள், அரசு ஆட்சிகள், சமயக் கோட்டங்கள். கலைபயில் கழ்கங்கள், செய்தி இதழ்கள். தொலைபேசிகள், வானொலிகள் முதலிய மக்கள் பண்பாட்டு விளக்கக் கருவிகள் மொழியால் விளைந்தனவே. மக்களினம் மொழியின்றிப் பல நூறாண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடும். மொழியால் உரையாடிக் கருத்துக்களை அறிவிக்கப் பழகிய பல நூறாண்டுகட் குப் பின்னரே எழுத்துக்களை அமைக்கும் ஆற்றலைப் பெற்று, எழுத்து மொழியை உருவாக்கி இருத்தல்