பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து. 37 ரால்தான் இயங்குகின்றது. உயிரின் சேர்க்கையில் லையேல் உடல் இயங்குவதில்லை. அதுபோல் உயிர் எழுத்தின் சேர்க்கை இல்லையேல் உடல் எழுத்து இயங்காமையை அறிந்து 'உயிர்' என்றும், 'மெய்' (உடல்) என்றும் பெயரிட்டனர் நம் முன்னோர். இப் பெயரீடு வேறு எம்மொழிகளிலும் காணப்படாத ஒன்றாகும். இவ்வாறு பெயரிட்ட நம் தமிழ் முன் னோர்களின் மெய்யுணர்வாற்றலை அறிந்து மகிழ்ந்து பெருமிதம் கொள்ளலாம். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலாசிரியர் அருட்டிரு. கால்டுவெல் அவர்களும் இதனை அறிந்து பாராட்டியுள்ளனர். தமிழ் எழுத்துக்களை வகுத்துப் பெயரிடும் காலத் தில் நம் தமிழ் முன்னோர் வாழ்வியல் மெய்யுணர்வில் சிறந்திருந்தனர் என்பதற்கு உயிர், மெய் என்ற எழுத் துக்களின் பெயரிடே சிறந்த சான்றாகும். பண்பாட் டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கும் காலத்தில் தான் மொழிக்குரிய எழுத்துக்களைப் படைத்துக் கொள்ள இயலும் எனும் உண்மையும் வெளிப்படு கின்றது. மக்களினங்களில் தமிழினம், தொன்மை யான நாகரிகத்தையும் பண்பாட்டையும் கொண்டி ருத்தலால் எல்லா இனங்களுக்கும் முன்பே தன் மொழிக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டது. இத னாலேயே தமிழே உலக முதன் மொழி என்றும் உலக மொழிகளின் தாய் என்றும் அறுதியிட்டுக் கூற இயலும். தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் எழுத்துக்கள் அமைக்கப்பட்டுவிட்டன என்பதை தொல்காப்பியர் நூற்பாவே தெற்றென அறிவிக் கின்றது. 1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்.