பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தொல்காப்பிய ஆராய்ச்சி எழுத்தெனப் படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே". தொல்காப்பியர் இந்நூற்பாவில் " முப்பஃது என்ப'" என்பதனால் அவர் காலத்திற்கு முன்பே எழுத்துக் கள் உருவாக்கப் பெற்று வகைப்படுத்தப்பட்டு விட் டன என அறியலாம். தொல்காப்பியர் தமக்கு முன் நிலவி வந்தனவற் றைக் குறிப்பீடுங்கால் பிறர் கூற்றாகவே குறிப்பிடு வார்.' என்ப', ' என்மனார்', 'ஆசிரியர்க்க' என்று கூறி முன்னோர் கூற்று என்பதனைப் புலப்படுத்திச் செல்லும் உயர் பெருந்தன்மையைக் காணலாம். ஆதலின் தொல்காப்பிய நூற்பாக்களைக் கொண்டு தமிழ் எழுத்துக்களின் தோற்றக் காலத்தை அறுதி யிட்டு உரைக்கலாம். வேற்று மொழியாளர் கூட்டு றவு ஏற்படுவதற்கு முன்பே, தமிழ் மொழியாளர் தமக்கென எழுத்து முறையை வகுத்துக் கொண்ட னர் என வாய்மை நெறியில் கூறலாம். தமிழ் நெடுங்கணக்கைக் கண்ட ஆரிய மொழி யினர் தமது மொழிக்குத் தமிழை யொட்டியே எழுத் துக்களைப் படைத்துக் கொண்டனர். சேர்க்கை ஒலி கட்குத் தமிழில் வரி வடிவங்கள் இல்லை. ஆரிய மொழி யினர் சேர்க்கை ஒலிகளுக்கும் வரி வடிவங்களை அமைத்துக் கொண்டனர். இவ்வுண்மையறியாத மொழி ஆராய்ச்சியாளர் சிலர். " ஆரியத்தைக் கண்டே தம் மொழிக்கு நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டனர் தமிழர்" என்று கூறிவிட்டனர். "அசோகன் கல்வெட்டுக்களில் வழங்கப்பெற்றன வும் சமசுகிருத மொழிகளை வழங்க மேற்கொள்ளப் பெற்றனவுமாகிய மிகப் பழைய வரி வடிவெழுத்துக்