பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து 41 ஒரு வரிவடிவம் ஒரே ஒலியைத்தான் குறிக்க வேண்டு மென்றும் அவ்வாறு பெற்றுள்ள மொழியே குறை பாடற்ற நெடுங் கணக்கைப் பெற்றதாகும் என்றும் குறிப்பிடுவர். ஆனால் உலகில் எம்மொழியுமே அவ் வாறு குறைபாடற்ற நெடுங்கணக்கைப் பெற்றிருக்க வில்லை. பெறவும் முடியாது. ஒலி வடிவங்கள் மிகுதி யாகவும் அவற்றை அறிவிக்கும் வரி வடிவங்கள் குறைவாகவும் இருப்பதுதான் உலகில் உள்ள மொழி களில் காணப்படுவதாகும். "ஒரு மொழியின் ஒலி வடிவங்களை அதன் நெடுங் கணக்கில் உள்ள எழுத் துக்களைக் கொண்டு கணக்கிடமுடியாது. பொது வாக மொழிகள் எல்லாம் தம் வரி வடிவங்களைவிட மிகுதியான ஒலி வடிவங்களைப் பெற்றுள்ளன. பிரெஞ்சு, இத்தாலியன், ஆங்கிலம், செர்மன் ஆகிய மொழிகளில் இந்நிலைமையைக் காணலாம்" என்று வெண்டிரீசு தமது 'மொழி' என்னும் நூலில் கூறு கின்றார்.1 ஆகவே முப்பத்தொரு வரிவடிவங்களைக் கொண்டுள்ள தமிழை வரிவடிவக் குறைபாடுடைய மொழியென்று இகழ்தல் ஏற்புடைத்தன்று. ஆரிய மொழியாம் சமசுகிருதத்தின் நெடுங்கணக் கில் உள்ள எழுத்துக்களுக்கும் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களுக்கும் ஒற்றுமை காணப்படு கின்றது. பத்து உயிர் எழுத்துக்களும், ஐவருக்கங் களிலுள்ள முதலும் கடையுமாயுள்ள எழுத்துக்களும் ய, ர, ல, வ முதலியனவும் இரண்டிலும் அமைந் துள்ளன. இதைக் கண்ணுற்ற அறிஞர் கால்டுவெல் 1. Language-Page-34: The: number of phonemes in 2 language cannot, of course. be calculated by the number of signs in its alphabet. Languages generally have more sounds than signs. This is the case in French, Italian, English and German.